நோக்கம்

மாகாண சபைகளின் செயற்பாடுளுக்கு வசதிகளை வழங்குதல், மத்திய அரசாங்கம் மற்றும் மாகாண சபைகளுக்கிடையே இணைப்புக்கள் உட்பட மாகாண சபைகளின் மானிட வளத்தை விருத்தி செய்து உற்பத்தித்திறன் மற்றும் வினைத்திறன்மிக்க மாகாண சபை நிருவாக முறையினை ஏற்படுத்தல்.

உபாயத் திட்டங்கள்

 • நாட்டின் மொத்த சமூகப் பொருளாதார விருத்திச் செயற்பாடுகளுக்காக பங்களிப்புச் செய்வதற்காக அவ்வவ் மாகாணங்களில் காணப்படும் மானிட வளத்தைப் பயன்படுத்துவதனை உறுதி செய்தல்.
 • மானிட வள விருத்தி மற்றும் விஞ்ஞான அடிப்படைக்கமைய உள் ளூ ராட்சி மன்ற நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் உற்பத்தித்திறன் மற்றும் வினைத்திறன்மிக்க மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற நிருவாக முறைமையினை உறுதிப்படுத்தல்.

provincial council

மாகாண சபைப் பிரிவின் முன்னேற்றங்கள் (2016.12.31 ஆம் திகதியன்று)

தொடர் இல. யோசனைகள் உப செயற்பாடுகள்
1 காணி சுவிகரிப்பு
 • உரிய 37 கோரிக்கைகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு காணி அமைச்சிற்கு பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
 • குறைபாடுகளுடன் அனுப்பப்பட்டுள்ள 124 கோரிக்கைகள் மீண்டும் பிரதம செயலாளக்கறக்கு அனுப்பட்டுள்ளது.
 • 1964 இலக்கம் 38 கொண்ட காணி சீர்திருத்த சட்டத்தில் 4 வது பிரிவிற்கமைய எதிர்ப்புக்களை பரிசீலனை செய்யும் பணிகளை மேற்கொள்வதற்காக மாகாண பிரதம செயலாளர்களின் பரிந்துரையுடன் 08 உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
2 பொது நிருவாகச் சுற்றிக்கை 06/2006 இற்கமைய மாகாண அரச சேவைக்குரிய பதவிகளுக்காக சேவைப் பிரமாணக் குறிப்பினை வகுத்தல்.
 • 06/2006 சுற்றறிக்கைமைய தயாரித்து பூர்த்தி செய்யப்பட்டுள்ள சேவைப் பிரமாணக் குறிப்புக்கள் 04 தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து செயற்பாடுகளை முன்னெடுத்தல்.
3

மாகாண சபையில் பதவி வகிப்பவர் மற்றும் உத்தியோகத்தர்கள் தொடர்பில் மேற்கொள்ளக்கூடிய தகவல்களை காலாண்டு அடிப்படையில் சமகாலப்படுத்தல்.

 • காலாண்டு அடிப்படையில் தகவல் கையேடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
04 மாகாண சபைகளுக்குரியதான அமைச்சரவை விஞ்ஞாபனம்
 • மாகாண சபைக்குரியதான பிரச்சினைகள் தொடர்பில் 03 அமைச்சரவை விஞ்ஞாபனங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
 • அமைச்சரவை விஞ்ஞாபனத்திற்காக 07 மேற்பார்வைகள் உரிய மாகாணங்களுக்கு சமர்ப்பித்தல் மற்றும் உரிய 17 தீர்மானங்கள் தொடர்பாக பிரதம செயலாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
5 பாராளுமன்றக் கேள்விகள்
 • பாராளுமன்றக் கேள்வி பாராளுமன்ற 20 கேள்விகள் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
6

பொது மக்கள் மகஜர்

 • பாராளுமன்ற பொது மக்கள் முறைப்பாட்டு செயற்பாட்டு சபைக்கு கிடைக்கப்பெற்ற முறையீடுகள்
 • 20 முறையீடுகள் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
 • 04 முறையீடுகளின் அறிக்கையினை பெற்றுக் கொள்வதற்காக மாகாணங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
7

மாகாண சபைகளுக்காக வாகனங்களை கொள்வனவு செய்தல் மற்றும் நாடு தழுவிய சேவையில் ஓய்வூதிய உத்தியோகத்தர்களுக்கு வரிச்சலுகையுடன் வாகனங்களை இறக்குமதி செய்யும் அனுமதிப்பத்திரங்களை
வெளியிடல்.

 • பொதுநிர்வாகச் சுற்றறிக்கை இலக்கம் 22/99ற்குரியதாக பரிந்துரைகள் வழங்குதல்.
 • தேசிய வரவு செலவுச் சுற்றறிக்கை இலக்கம் 1/2016இற்கமைய மாகாண சபைகளுக்காக வாகனங்களை கொள்வனவு செய்தல்.
 • கிடைக்கப்பெற்ற 33 விண்ணப்பப்படிவங்கள் பரிந்துரை செய்யப்பட்டு வர்த்தக மற்றும் முதலீட்டு கொள்கைத் திணைக்கத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
 • செலவின நிர்வாகக் குழுவின் அங்கீகாரத்திற்காக 15 விண்ணப்பப்படிவங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
8

புதிய பதவிகளை உருவாக்குதல்

 • மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களுக்காக பதவிகளை உருவாக்குவதற்கு முகாமைத்துவ சேவை சுற்றறிக்கை 3/2016இற்கமைய கிடைக்கப் பெற்றுள்ள 2940 கோரிக்கைகளை பரிந்துரை
  செய்து முகாமைத்துவ சேவைத்திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
9

வெளிநாட்டு தொண்டர் ஊழியர்களுக்காக வீசா வழங்குதல் /காலத்தை நீடித்தல்

 • வெளிநாட்டு வளத் திணைக்களத்தினால் தொண்டர் ஊழியர்களுக்கு வீசா வழங்குவதற்காக அனுப்பப்பட்டுள்ள 35 கோரிக்கைகளுக்கு இணக்கத்தை பெற்றுக் கொள்வதற்காக மாகாணங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
 • மாகாணங்கள் மூலம் இணக்கங்கள் பெறப்பட்டுள்ள 18 வீசா கோரிக்கைகள் வெளிநாட்டு வளத்திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
10

மாகாண பிரதம செயலாளர்களின் கூட்டம்

 • 06 தடவைகள் கூட்டங்கள் நடாத்தப்பட்டன.
11 மாகாண சபையில் பதவி வகிப்போரின் வரப்பிரசாத கொடுப்பனவு வசதிகள்
 • மாகாண சபைகளில் அங்கீகரிக்கப்பட்ட பதவி வகிப்போருக்கான கொடுப்பனவு மற்றும் வரப்பிரசாதங்கள் தொடர்பிலான ஒழுங்குகளை வகுப்பதற்காக மாகாண சபைகளிடமிருந்து பெறப்பட்டுள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு சுற்றறிக்கையைத் தயாரித்து 2016.12.07 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
12

அரசியல் காரணங்களுக்கமைய பல்வேறுபட்ட பிரச்சினைகளை எதிர்கொண்டோருக்காக நிவாரணங்களை வழங்குதல்.

 • பொதுநிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சிற்கு அனுப்பப்பட்ட 204 மேன்முறையீடுகள்
 • உரிய மாகாண சபைகளுக்கு 2016.08.08 ஆம் திகதி எதிர்காலச் செயற்பாடுகளுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன
மூலம்: மாகாண சபைப் பிரிவு