தற்போது டெங்கு நோய் மீண்டும் அதிகரித்து வருவதால், அது ஒரு தொற்றுநோயாக உருவாகாமல் இருப்பதற்கு நாம் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்.கடந்த வருடத்தில் 25,900 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்தது டன் அவர்களில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அலுவல்கள் இராஜாங்க அமைச்சு ஏற்கனவே 20 மற்றும் 21.01.2022 ஆம் திகதிகளில் டெங்கு நோயைத் தடுப்பதற்கான"சுத்தமான சூழல்-ஆரோக்கியமான நாளை" என்ற பெயரில் நாடளாவிய ரீதியில் டெங்கு தடுப்புவேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளன.ரொஷான் ரணசிங்க கௌரவ மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அலுவல்கள் இராஜாங்க அமைச்சர், அனைத்து அரசாங்க அமைச்சுக்கள், அனைத்து மாகாண சபைகள், உள்ளூராட்சி நிறுவனங்கள், அனைத்து பொது நிறுவனங்கள், அனைத்து தனியார் நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
இதன் அங்குரார்ப்பண வைபவம் 2022 ஜனவரி 20 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு கோட்டை மாநகரசபை வளாகத்தில் கௌரவ மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க உள்ளிட்ட அமைச்சர்களின் பங்கேற்புடன் நடைபெறவுள்ளது.

 

new sec